Tuesday, May 21, 2024

வீடு தேடி வரும் வங்கி சேவை – நிர்மலா சீதாராமன் தொடக்கம்!!

Must Read

மக்களுக்கு மிகவும் உதவும் வகையில் வீடு தேடி வரும் வங்கி சேவையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடக்கி வைத்தார். கொரோனா ஊரடங்கு போன்ற கடுமையான காலங்களில் இந்த சேவை உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“டிஜிட்டல் மயமான வங்கி”

நாம் இருக்கும் அவசரகால சூழலில் தனியாக நேரம் ஒதுக்கி ஒரு குறிப்பிட்ட வேலையை பார்க்க முடியாது. இதனால் பல சேவைகளும் நம் வீடு தேடி வருவது போல் உள்ளது. உணவு பொருட்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்துகள் இவை அனைத்தும் நாம் பயன்படுத்தும் தொலைபேசியில் உள்ள ஆஃப்களின் மூலமாக வீடு தேடி வருகின்றது. இதனால் பலருக்கும் சிரமம் இருப்பதில்லை. நேரத்தை மிச்சப்படுத்துவதால் மக்கள் மத்தியில் இன்று அதிகமாக பயன்படுத்தபடுகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இப்படியான நிலையில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வங்கி சேவையையும் எளிதாக கிடைக்க செய்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கூறியது. இதனை பரிசீலனை செய்த மத்திய அரசு வங்கி சேவைகள் மக்களின் வீட்டிற்கே சென்று கிடைக்கும்படியாக ஒரு திட்டத்தை உருவாக்கியது. அதனை தான் இன்று மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

“50 சதவீத சேவைகள்”:

கிட்டத்தட்ட 50 சதவீத வங்கி சேவைகள் டிஜிட்டல் மூலமாக நடைபெறும் போது இந்த திட்டமும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள 100 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த சேவை இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் சில நாட்களில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்.12ம் தேதி ஊரடங்கு உத்தரவு ரத்து!!

doorstep bank alliances meet
doorstep bank alliances meet

இது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் “இந்த திட்டம் மூத்தகுடிமக்களுக்கு பெரிதும் உதவும். மக்களின் தேவைகளை எளிமைப்படுத்தும் விதமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் பொதுத்துறை வங்கிகளுக்கு பொருந்தும்.” என்று தெரிவித்துள்ளார். இப்போதைக்கு இந்த திட்டம் மூலமாக சில சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன என்ன சேவைகள் வழங்கப்படும் என்றால்,

  • புதிய காசோலை தொடக்கம்
  • புத்தக கோரிக்கை சீட்டு தொடங்குதல்
  • 15 ஜி / 15 எச் படிவங்கள் நிரப்புதல்
  • ஐடி / ஜிஎஸ்டி சலான் நிரப்புதல்
  • நிலையான வழிமுறைகளுக்கான கோரிக்கை செய்தல்
  • கணக்கு அறிக்கைக்கான கோரிக்கை

இது போன்ற சேவைகள் முதலில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், இதர சேவைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சிகிச்சைக்கு லண்டன்  செல்லும் தோனி?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணியை பொறுத்தவரை தனது கடைசி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -