செப்டம்பர் 12ம் தேதி ஊரடங்கு உத்தரவு ரத்து – மாநில முதல்வர் அறிவிப்பு!!

0
west bengal curfew
west bengal curfew

நாடு முழுவதும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதாக சென்று வரும் வகையில் செப்.12ம் தேதி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

ஊரடங்கு ரத்து:

மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 20ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை நடத்தும் முடிவில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. அதன்படி வரும் செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

West Bengal CM
West Bengal CM

இந்நிலையில் செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட நீட் 2020 தேர்வை கருத்தில் கொண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை நீக்குவது குறித்து மாணவர்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்ததால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளார். இருப்பினும் செப்.11ம் தேதி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5 மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை தொடும் – தலைமை செயலாளர் எச்சரிக்கை!!

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 12 ஆம் தேதி ஊரடங்கை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, இதனால் மாணவர்கள் 13 ஆம் தேதி தேர்வில் எந்தவித அச்சமும், கவலையும் இல்லாமல் கலந்து கொள்ளலாம். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here