ஏப்ரல் 1ல் முதல் வங்கியில் இருந்து மெசேஜும் வராதா??குழப்படையும் மக்கள்!!

0

ஏற்கனவே பொதுத்துறை வங்கிகள் இணைப்பு காரணமாக சில வங்கிகளின் காசோலை வருகிற 1ம் தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற 1ம் தேதி முதல் வங்கிகளில் இருந்து மெசேஜும் வராது என்று தெரிவித்துள்ளனர்.

வங்கிகள்:

மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது. தற்போது அதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளது. இதனால் வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் சில வங்கிகளின் பாஸ்புக், காசோலை போன்றவற்றை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது பயனாளர்கள் மேலும் கவலை அடையும் வகையில் ஓர் தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அது என்னவென்றால் வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் வங்கிகளில் இருந்து வரும் முக்கியமான மெசேஜும் வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை TRAI தெரிவித்துள்ளது. காரணம் மக்களை எரிச்சலூட்டும் வகையில் மற்றும் போலியான வங்கி மெசேஜ் தொடர்ந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு உதவ தவறும் வங்கிகளில் இருந்து இனி மெசேஜ் வரத்து என்று TRAI நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுக்கு கொரோனா – சோகத்தில் ரசிகர்கள்!!

தற்போது அதற்கான பட்டியலையும் TRAI நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் TRAI தனக்கென பல விதிமுறைகளை வைத்துள்ளது. அதனை அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும் என்று கூறி வருகிறது. தற்போது இதனை பின்பற்றாத வங்கிகளை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 39 வங்கிகள் இடம்பெற்றுள்ளது. அதில் HDFC, Kotak Mahendra, canara, Central bank of India போன்ற முக்கிய வங்கிகளும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here