ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “ஜெய் சுல்தான்” பாடல் – உற்சாகத்தில் படக்குழு!!

0

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் “சுல்தான்” இந்த திரைப்படத்தின் “ஜெய் சுல்தான்” பாடல் வெளியாகி 23 மணி நேரத்தில் 1 மில்லியனிற்கும் மேலான பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுல்தான் திரைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது “சுல்தான்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துளளார். இந்த திரைப்படம் ‘ட்ரீம் வாரியர்’ நிறுவனத்தால் தயாரிக்கபட்டு விவேக் – மெர்வின் இருவரின் இசையில் வெளிவர உள்ளது. இந்த படத்தினை “ரெமோ” திரைப்படத்தினை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.

வயசானாலும் உங்க அழகும் கவர்ச்சியும் குறையல, த்ரிஷா – சொக்கி போன ரசிகர்கள்!!

இந்த திரைப்படத்தில் முதன் முறையாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படியாக இருக்க இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்று கூட சொல்லலாம்.இதனை அடுத்து இந்த திரைப்படத்தின் குத்து பாடலான “ஜெய் சுல்தான்” பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. இந்த பாடல் வெளியான போதே இந்த பாடலுக்கு பல ரசிகர்கள் உருவாகினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்த பாட்டு அனைவரும் விருப்பம் வண்ணமும் உள்ளது. நேற்று இந்த பாட்டின் வீடியோ ரிலீஸ் ஆனது. இதனை படக்குழுவினர் முன்பே தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து இந்த பாடல் வெளியாகி 1 நாள் தான் ஆகியுள்ளது. ஆனால், அதற்குள்ளாக 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here