இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுக்கு கொரோனா – சோகத்தில் ரசிகர்கள்!!

0

இந்திய டி 20 மகளிர் அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுருக்கு தற்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்திய அணி கேப்டன்:

கடைசியாக இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான போட்டிகளை விளையாடியது. இதில் டி 20 தொடரில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதேபோல் ஒரு நாள் தொடரையும் தென் ஆப்ரிக்கா அணி 4-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை வென்று அசத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்திய மகளிர் அணிக்கு டி 20 கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் செயல்பட்டு வருகிறார். இந்தியாவில் கடந்த சில மதங்களாகவே கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாகவே ,மிக முக்கிய பிரபலங்களை அதிகம் பாதித்து வருகிறது. தற்போது அந்த வகையில் இந்திய மகளிர் அணியின் டி 20 கேப்டனான ஹர்மன்பிரீத் கவுருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திரையரங்கம், டாஸ்மாக் மூடல்?? உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

இதனால் கிரிக்கெட் உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ஹர்மன்பிரீத் கூறியதாவது, தற்போது எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின் படி என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன். மேலும் என்னுடன் கடைசி 7 நாட்களாக இருந்தவர்கள் அவசியமாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here