14வது ஐபிஎல் தொடர் – புதிய விதிமுறைகளை அறிவித்த பிசிசிஐ!!

0

இந்தியாவில் வருகிற ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதில் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

ஐபிஎல்

கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் ஐபிஎல் போட்டிகளை நடத்த சற்று தாமதம் ஆனது. மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபில் வைத்து நடைபெற்றது. மேலும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எங்கு வைத்து நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடக்கும் என்று பிசிசிஐ அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த முறை இந்தியாவில் 6 நகரங்களில் மட்டும் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் ரசிகர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு எந்த அணிக்கும் தனது சொந்த மைதானத்தில் போட்டி நடக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் துவங்கவிருக்கும் நிலையில் தற்போது பிசிசிஐ இந்த தொடருக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுக்கு கொரோனா – சோகத்தில் ரசிகர்கள்!!

அதன்படி இந்த தொடரில் சாப்ட் சிக்னலுக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது. மேலும் DRS முடிவுகள் அம்பையர் கால்ஸ்க்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஷார்ட் ரன் மற்றும் நோ பால் குறித்த முடிவுகளில் மூன்றாவது நடுவர் குறுக்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த தொடரில் போட்டிகளின் நேரத்தையும் குறைக்க முடிவு செய்துள்ளனராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here