இணையத்தை தெறிக்க விடும் “அஸ்கு மரோ” பாடல் – குத்தாட்டம் போடும் கவினின் ரசிகர்கள்!!

0

நடிகர் கவின் தற்போது ஒரு ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார். இதனை அடுத்து அந்த பாடலின் ப்ரோமோ நேற்று ரிலீஸ் ஆனதை அடுத்து தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் இந்த பாடலை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் கவின்

சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் கவின். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” தொடரில் கதாநாயகனாக நடித்தார். அதில் இவரது நடிப்பு மற்றும் நகைச்சுவை ஆற்றல் அனைவரையும் ஈர்த்தது என்றே கூறலாம். அதே போல் இவருக்கு பெண் ரசிகைகள் சற்று அதிகம். காரணம், இவர் சீரியலில் நடித்திருந்ததால் இவருக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகினர்.

14வது ஐபிஎல் தொடர் – புதிய விதிமுறைகளை அறிவித்த பிசிசிஐ!!

இப்படியான சூழலில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால் இவரது நல்ல குணம் மக்களுக்கு நன்றாகவே தெரிந்தது. அதே போல் அந்த நிகழ்ச்சியில் இவர் சில சர்ச்சைகளில் கூட சிக்கினார். பின், தனது எதார்த்தமான குணத்தின் காரணமாக இவர் மக்கள் மத்தியில் பெயர் பெற்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க இவர் தற்போது ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார். நடிகை தேஜுவுடன் இவர் “அஸ்கு மரோ” என்ற அந்த பாடலின் ப்ரோமோ நேற்று வெளியானது. ஒரே நாளில் அந்த ப்ரோமோ 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது. தற்போது இந்த பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை வெறும் இரண்டே நாட்களில் இயக்கி உள்ளனர். அதே போல் இந்த பாடலை பாடகி ஷிவாங்கி பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here