அழகான & பளிச்சென்ற முகத்தை பெறவேண்டுமா?? இதோ தக்காளி டிப்ஸ்!!

0

உங்க முகம் தக்காளி பழம் மாதிரி பளபளன்னு இருக்கனுமா அதுக்கு ஒரு தக்காளி போதுங்க. வீட்ல இருக்குற பொருட்களை வச்சு எப்படி நாம முகம் மற்றும் உடலை அழகா வச்சுக்கிறதுனு பார்க்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தியே நம் அழகை பராமரிக்க முடியும். அவை, என்ன எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

முகத்தை பளபளப்பாக்கும் தக்காளி:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தக்காளியை தோல் மற்றும் விதைகளை நீக்கி கூழாக்கி, அதில் சிறிது ஆலிவ் எண்ணையை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் ஒட்டிய கண்ணம் தக்காளி பழம் போல் அழகாக இருக்கும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சிலருக்கு எப்பொழுதும் முகத்தில் எப்பொழுதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும். மேக்கப் போட்டாலும் தங்காது. கொஞ்ச நேரத்தில் எண்ணெய் வடிந்தபடி ஆகிவிடும். இவர்கள் தக்காளி பழத்தை அரைத்து கூழாக்கி அரைமணிநேரம் முகத்தில் போட்டுவிட்டு கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.

தக்காளி விழுது மற்றும் பாதாம் விழுதை சம அளவு எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் தோன்றும் சுருக்கள் மறையும். பாதாமில் உள்ள சத்துக்கள் நம் சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கும் நல்லது. தினமும் 5 ஊற வைத்த பாதம் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

நீண்ட நாட்களாக முகத்தை சரியாக பராமரிக்காமல் இருந்தால் முகத்தில் உள்ள செல்கள் இறந்துபோய் இருக்கும். பார்க்கவே கலை இல்லாமல் தோன்றும். அவர்கள் தக்காளி விழுது மற்றும் ரவை கலந்து முகத்தில் நன்றாக முகத்தில் தேய்த்து வந்தால் முகம் மிருதுவாக இருக்கும்.

தக்காளி மற்றும் பச்சை பால் சேர்த்து முகத்தில் தடவி 45 நிமிடம் ஊறவைத்து கழுவினால் முகம் வெள்ளையாக மாறும். எந்த ஒரு பேஸ்பேக் போடுவதற்கு முன்பும் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். பேஸ்பேக் போட்டபின் சோப் பயன்படுத்த கூடாது.

தக்காளி சாறு, தேன் மற்றும் சர்க்கரை மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் போட்டால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சென்று மின்னும். சர்க்கரை கொண்டு முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். தேவையற்ற இறந்த செல்கள் மறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here