மதுரையில் ரெம்டெசிவர் மருந்திற்கான டோக்கன் வழங்கல் – மக்களின் கூட்டத்தை தவிர்க்க ஏற்பாடு!!

0

தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான ரெம்டெசிவர் மருந்தினை பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ரெம்டெசிவர் மருந்து:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நோயாளிகள் மருத்துவனைகளில் குவிந்த வண்ணமாக உள்ளனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ரெம்டெசிவர் மருந்தினை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து வருகின்றனர். லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து தேவைப்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இருந்தும் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் கூட்டம் ரெம்டெசிவர் மருந்தை வாங்க அலைமோதி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பேரலை – உதவி கரம் நீட்டும் சன் டிவி!!

தற்போது இதனை தடுக்கும் வகையில் மதுரையில் ரெம்டெசிவர் மருந்தினை வாங்க இன்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 75 ரெம்டெசிவர் மருந்தினை வழங்குவதற்கு இன்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டோக்கன் பெற்றவர்கள் மட்டும் நாளை வர வேண்டும் என்றும் பெறாதவர்கள் நாளை வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here