மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி !!! தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்..

0
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மாபெரும் மற்றும் பிரபல வில்லனாக நடித்தவர் மன்சூர் அலிகான். இப்பொழுது உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான் “வேலை கிடைச்சிருச்சு” என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்.பின் ஆர்.கே செல்வமணி இயக்கிய கேப்டன் விஜயகாந்த் நடித்த “கேப்டன் பிரபாகரன்” என்னும் படத்தின் மூலம் நட்சத்திர நடிகராக திகழ்ந்தார். அதன்பின் அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பல படங்களில் வில்லனாகவும் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வந்த அவர் அவரே ஒரு சில படங்களை இயக்கியும் வந்தார். சினிமா துறையை விட்டு வெளியே வந்த மன்சூர் அலி கான் அரசியல் ஆர்வம் அதிகம் ஆனதால் அரசியலில் குதித்தார். மன்சூர் அலி கான் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தார் கடந்த மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டி போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்
பின் அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியை மன்சூர் அலிகான் தொடங்கினார். கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சி சார்பாக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் இழந்து மிகவும் குறைவான வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மன்சூரலிகான் ஒரு சமூக ஆர்வலர் போல் வந்தார் தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும் மறைந்த நடிகர் விவேக் மரணத்திற்கும் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார். கொரோனா மருந்து பற்றி அவதூறு பரப்பியதாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கிற்காக மன்சூர் முன் ஜாமீன் வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் அதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மன்சூர் அலிகானை எச்சரித்து இந்த மாதிரி பொய்யான கருத்துக்களை தெரிவிக்க கூடாது என ஒரு சில நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டு அபராதமும் விதித்தது.
மன்சூரலிகான் மருத்துவமனையில் அனுமதி.
மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி !!!
மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி !!!
இந்நிலையில் மன்சூரலிகான் உடல் நல குறைவு காரணமாக இன்று காலை சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள போவதாகவும் கூறினார்.அதற்கு முன் கொரோனா டெஸ்ட் மற்றும் அனைத்து டெஸ்ட்களும் எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here