இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பேரலை – உதவி கரம் நீட்டும் சன் டிவி!!

0

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தவும், பொருளாதார பாதிப்பை சரிகட்டவும் சன் டிவி குழுமம் சார்பில் 30 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.சன் டி.வி. குழுமம் சார்பில் ரூ.30 கோடி நிதியுதவி

சன் டி.வி. குழுமம் சார்பில் ரூ.30 கோடி நிதியுதவி:

கொரோனா வைரசின் 2ம் அலை பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சில மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. கொரோனா வைரசின் 2ம் தொற்று அலையால் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சன் டி.வி. குழுமம் சார்பில் 30 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் மருந்துகளையும் சன் டி.வி. குழுமம் வழங்கவுள்ளது. அதுமட்டும் இல்லாமல் தமிழக மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைள் எடுத்த வண்ணம் இருக்கின்றன. அதன் படி பல்வேறு நிறுவனங்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள், நடிகர்கள், என பல்வேறு பிரபலங்கள் முதலமைச்சர், பிரதமர் நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here