ஒரு சவுரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்தை நெருங்குகிறது – அதிர்ச்சியில் மக்கள்!!

0

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அபாரமாக உயர்ந்து வருகிறது. ஒரு சவுரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்தை நெருங்குகிறது. வரும் மாதங்களில் சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடக்க இருப்பதால் மக்கள் அனைவரும் நகை வாங்குவதற்கு தயங்கி வருகின்றனர்.

தங்கம்:

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றம், இரக்கம் கண்டு வருகிறது. கொரோனா காலங்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாது அளவிற்கு உயர்ந்தது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி அன்று ஒரு சவுரன் ரூ.37,696க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்பு 31ம் தேதி சற்று உயர்ந்து ஒரு சவுரன் தங்கம் ரூ.38,000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் புத்தாண்டு அன்று 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவுரன் ஆபரண தங்கம் ரூ.37,880க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் 2ம் தேதி அன்று அதிரடியாக ஒரு சவுரன் தங்கத்தின் விலை ரூ.104 உயர்ந்து ரூ.37,984க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக 4 நாட்களில் சவுரனுக்கு ரூ.288 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் 3ம் தேதி அன்று ஞாயிற்று கிழமை என்பதால் தங்கம் மார்கெட்டிற்கு விடுமுறை என்பதால் சனிக்கிழமை நிலவரப்படி தங்கம் விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்று தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து சவுரனுக்கு ரூ.536 உயர்ந்து ஒரு சவுரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.38,520க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.208 உயர்ந்து ரூ.38,728க்கு விற்பனை செய்யப்படு வருகிறது. தற்போது தங்கத்தின் விலை ரூ.39,000 நெருங்குவதால் மக்கள் அனைவரும் கவலை அடைந்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் கொரோனாவால் மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு!!

gold rate
gold rate

வரும் காலங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதால் தங்கம் வாங்குவதற்கு மக்கள் தயங்கி வருகின்றனர். மேலும் இன்றைய நிலவர படி சென்னையில் 1 கிராம் ஆபரண தங்கம் ரூ.26 உயர்ந்து ரூ.4,841க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் ஒரு சவுரன் ஆபரண தங்கத்தின் விலை சுமார் ரூ.1032 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் இன்றைய நிலவரபடி வெள்ளி 1 கிராம் 74.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1கிலோ கட்டி வெள்ளியின் விலை 74,100க்கு விற்பனை.செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here