இங்கிலாந்தில் கொரோனாவால் மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு!!

1
Prime Minister Boris Johnson during a media briefing in Downing Street, London, on Covid-19. (Photo by Tolga Akmen/PA Images via Getty Images)

தற்போது இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே அந்த நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனை இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

உருமாறிய கொரோனா:

சுமார் 1 ஆண்டு காலமாக கொரோனா என்னும் வைரஸ் உலக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது உலக மக்கள் யாரும் எதிர் பாரத வகையில் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. இந்த வைரஸ் இங்கிலாந்தில் உருவாகியுள்ளது. மேலும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் முன் வந்த கொரோனா வைரஸை விட 75 சதவீதம் வீரியம் மிகுந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் ஆற்றல் மிக்கது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக நாடுகள் அனைத்தும் இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்துக்கு சேவையை நிறுத்திவைத்து.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இங்கிலாந்து நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை அந்த நாட்டு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் கிறிஸ்துமஸ் போன்ற நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கு தடை விதித்தது. தற்போது முன்பு அறிவித்திருந்த ஊரடங்கு காலம் முடிவடைந்தது. ஆனாலும் அங்கு உருமாறிய கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. தற்போது இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

#INDvsAUS டெஸ்ட் ஜெர்சியில் நடராஜன் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய அளவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. மேலும் இந்த ஊரடங்கு 6 வார காலம் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது வரும் பிப்ரவரி மாதம் வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். மேலும் அது வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என்றும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் வீட்டிலே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here