வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிப்பு – வெளியுறவு துறை ஒப்புதல்!!

0

தமிழகம் உட்பட மேலும் ஐந்து மாநிலங்களில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற போகும் தேர்தலுக்கு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வெளியுறவு துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிப்பு

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு அரசுகள் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதனை தொடர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது வாக்குகளை எப்படி அளிப்பது என்ற கேள்வி உருவாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வெளிநாடு வாழ் மக்கள் வாக்களிக்கும் விதமாக மத்திய சட்டத்துறை மற்றும் வெளியுறவு துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் திட்டத்தை அமல்படுத்தலாம் என்று வெளியுறவு துறைக்கு பதில் அனுப்பியுள்ளது. மேலும் சட்டத்தின் விதிமுறையை சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் எனவும் கூறியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேர்தல் ஆணையம் மத்திய சட்ட துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு சில தேர்தல் விதிமுறைகளில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த ஆண்டே தேர்தல் சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டும் எனவும் மத்திய சட்டத்துறைக்கு தேர்தல் ஆணையம் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

#INDvsAUS டெஸ்ட் ஜெர்சியில் நடராஜன் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய குறிப்பிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு தபால் வாக்களிக்க form 12 படிவம் மூலம் விண்ணப்பிக்க உரிய சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த ஐந்து மாநில தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேவையான நடைமுறைகளை செய்ய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here