Wednesday, May 15, 2024

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் – எலான் மஸ்க் புதிய சாதனை!!

Must Read

அமெரிக்காவிலிருந்து நான்கு வீரர்களுடன் விண்வெளி ஆய்வு மையத்திற்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம். புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தப்பட்டது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்:

அமெரிக்காவின் மண்ணில் இருந்து நாசாவிற்காக முதல் முதலாக விண்ணிற்கு மனிதர்களை அனுப்பும் நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். நாசாவை சேர்ந்த 4 வீரர்கள் இன்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டார்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் இவர்கள் இன்று விண்ணிற்கு சென்றுள்ளார்கள். அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சுமார் 24 மணி நேரத்தில் இந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றடையும். அந்த ராக்கெடில் சென்ற 4 வீரர்களும் அங்கு 6 மாதங்களுக்கு தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளிக்கு அமெரிக்காவில் இருந்து முதல் முதலாக மனிதர்களை அனுப்பும் தனியார் நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. இதன்மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் புதிய உயரத்தை எட்டியுள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடைசியாக அமெரிக்கா ஜூலை 8, 2011 ஆம் ஆண்டு நாசா மனிதர்களை தங்கள் மண்ணிலிருந்து விண்ணுக்கு அனுப்பியது. அதன்பிறகு இப்போது தான் அமெரிக்கா மண்ணில் இருந்து மனிதர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாகியுள்ள Falcon 9 ராக்கெட் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி விண்வெளி வீரர்களை விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து சென்று மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு வந்தது. முதல்முறையாக வணிக ரீதியான பயணத்தை நாசா தொடங்கியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -