கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வேண்டுமா?? இதோ சூப்பரான டிப்ஸ்!!

0

இன்றைய தலைமுறையினருக்கு பெரும் கவலையே தலை முடி உதிர்வு தொல்லை. எங்கு பார்த்தாலும் முடி கீழே விழுந்து கிடக்கும். இதனால், வீட்டில் பல சண்டைகள் கூட வந்திருக்கும். காலையில் அவசர அவசரமாக வேலைக்கு செல்லும்போது தலைமுடி நாம் நினைத்த மாதிரி சரியாக இல்லை என்றால் நமக்கு எரிச்சல் வரும். இதுபோன்ற, பல பிரச்சனைகள் கூந்தல் உதிர்வால் உருவாகிறது. இதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்.

கூந்தல் பராமரிப்பு:

மற்ற காரியத்தை போன்று கூந்தலை சுலபமாக நினைத்து விட முடியாது. நமக்கு அழகே கூந்தல் தான். ஒருவர் என்னதான் அழகாக இருந்தாலும் தலையில் முடி இல்லையென்றால் பார்க்க அழகாக இருக்காது. இதனால், அசாதாரணமாக இருந்து விடாமல் தலைமுடிக்கு சரியான பராமரிப்பை பின்பற்ற வேண்டும். முடி உதிர்வை நிறுத்த நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், “எண்ணெய் மசாஜ்” வாரத்தில் ஒரு முறையாவது கண்டிப்பாக செய்ய வேண்டும்.

கொய்யா இலை:

நம் அனைத்து ஊர் மற்றும் வீடுகளில் சுலபமாக கிடைக்க கூடிய கொய்யா இலை கூந்தலுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கொய்யா இலையை வைத்து பல நன்மைகள் இருக்கின்றன. அதை நாம் நேரடியாகவோ  அல்லது வெளிப்புறமாகவோ எடுத்து கொள்ளும்போது நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. செயற்கையான முறைகளை பின்பற்றாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நீளமான கூந்தலை பெற முடியும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொய்யா இலையை வேகவைத்து காலையில் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் குடிக்கும் பொழுது கூந்தல் உதிர்வு, உடல் எடை குறைதல், சர்க்கரை நோய், தைராய்டு போன்ற நோய்கள் சரியாகிறது. தலையில் பொடுகு, அரிப்பு, பேன் உள்ளவர்கள் கொய்யா இலையை நன்றாக காய்ச்சி ஆற வைத்து, அந்த நீரால் தலையை அலசும் பொழுது தலைமுடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து, முடி நன்றாக வளரும்.

ஆலிவிதை:

ஒரு சிலருக்கு முடி பார்ப்பதற்கு கலை இல்லாமல் வறண்டு காணப்படும். அப்படி, இருப்பவர்கள் ஆலி விதையை 50 கிராம் எடுத்து தண்ணீரில் வேக வைக்க வேண்டும். அரைமுடி தேங்காயை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த ஆலிவிதையை நன்றாக பிழிந்து அதன் சாறை மட்டும் எடுத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கலந்து முடிக்கு தேய்த்து 15 நிமிடம் கழித்து குளித்தால் முடி கருப்பாக, அழகாக இருக்கும். இந்த ஹேர்மாஸ்க் முடி வளரவும் உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here