9 வருடத்திற்கு முன்பு இதே தினத்தில் நிகழ்ந்த சோகம் – மெமரிஸ் பிரிங் பேக்!!

0

9 வருடத்திற்கு முன்னாள் இதே தினத்தில் தான் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கிய நாள். இந்த நினைவுகள் நிகழ்ந்து 9 வருடங்கள் ஆகியும் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.

சச்சின் டெண்டுல்கர்:

கிரிக்கெட் உலகின் God of Cricket, கிரிக்கெட் ஜாம்பவான் என்று சொல்லி அழைக்கப்படுபவர் தான் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் இவரது சாதனைகள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டது போல் இன்றும் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் தனது கால் தடத்தை மிக ஆழமாக பதித்துள்ளார் சச்சின். மேலும் கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கண்ட முதல் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விளையாட்டில் சிறந்து விளங்கிய இவர் கடந்த 2012ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்தியா அரசு இவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி சிறப்பித்தது. இந்த விருதை பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றார். இவர் தனது ஒரு நாள் தொடரில் இருந்து கடந்த 2012ம் ஆண்டு இதே தினத்தில் தனது கடைசி போட்டியை விளையாடினார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அதன் பின்பு தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டார். இதனால் சச்சினின் ரசிகர்கள் பெரிதும் வருந்தினர். இவர் இதுவரை விளையாடிய ஒரு நாள் போட்டிகளில் 18,426 ரன்களை குவித்துள்ளார். மேலும் 49 சதங்களை ஒரு நாள் தொடரில் பதிவு செய்துள்ளார். 9 வருடங்கள் கழித்தும் இவரது புகழ் நிலைத்து நிற்பது பெருமைக்குரியதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here