பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகும் நடிகை – இதுதான் காரணமா??

0

சன் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் நடிக்கும் கீர்த்தி தற்போது சீரியலை விட்டு விலகி இருப்பதாக தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

பூவே உனக்காக

சீரியல்கள் அனைத்தும் தற்போது மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறது. மேலும் தற்போதெல்லாம் வெள்ளித்திரையில் காட்டப்படுவதை போலவே சீரியல்கள் அனைத்து எடுக்கப்படுகிறது. பல ரொமான்ஸ்களுடனும், சண்டை காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் விஜய் டிவி முதல் சன் டிவி வரை பல சீரியல்களை இறக்கி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் பூவே உனக்காக சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரு தோழிகளின் ஒற்றுமையை வைத்து எடுக்கப்பட்ட சீரியல் என்பதால் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தது. மேலும் இந்த சீரியல் ஹீரோ கதிருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு. பூவரசி மற்றும் கீர்த்தி இவர்களில் யார் கதிருடன் வாழ போகிறார்கள் என்பதே கதையாக இருந்தது. இந்த சீரியலில் நடிக்கும் கீர்த்தி பிரபல நடிகரான லிவிங்ஸ்டனின் மகள் ஆவர். ஏற்கனவே லிவிங்ஸ்டன் தனது மகள் நடிக்க கூடாது என்று கூறியிருந்தார்.

கடவுள் சொன்னதாக சொல்லி பாட்டியை கல்லால் அடித்து கொன்ற சிறுவன் – ஆன்லைன் விளையாட்டால் வந்த விபரீதம்!!

இதனிடையே தற்போது அந்த சீரியலை விட்டு விலகப்போவதாக அதிகாரபூர்வமாக கீர்த்தி தனது வலைப்பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் சோகமடைந்துள்ளனர். பூவரசிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அந்த அளவிற்கு கீர்த்திக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தான் மேலும் படிக்க போவதாகவும், அதனால் தான் விலகப்போவதாகவும் கூறியிருக்கிறார். இதன் பிறகு அவரது கதாபாத்திரத்திற்கு வேறு ஆளை போடுவார்களா என்பதும் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here