மாணவர்களின் பெற்றோர்களை தாக்கும் கொரோனா – பள்ளிகள் விடுமுறைக்கு ஆலோசனை!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சில பகுதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகம்:

கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அசுர வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொரோனா வேகம் எடுப்பது சற்று கவலைக்குரிய விஷயமே. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகமாக கொரோனாவால் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது போல் தெரிகிறது. இதற்கு ஏற்றார் போல் தமிழக மக்களும் கொரோனா அச்சம் இன்றி வெளியில் சுற்றி திரிகின்றனர். இதனால் தற்போது சுகாதாரத்துறை மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு 9,10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெறாது என்று அரசு அறிவித்தது.

கடவுள் சொன்னதாக சொல்லி பாட்டியை கல்லால் அடித்து கொன்ற சிறுவன் – ஆன்லைன் விளையாட்டால் வந்த விபரீதம்!!

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து பெற்றோர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here