இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதல் – ஓராண்டு நினைவு அஞ்சலி.!

0

இலங்கையில் கடந்த 2019 ஆண்டில் இலங்கையில் பல்வேறு ஆலயங்களில் சங்கிலித்தொடர் போல குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது .இதே நாளில் ( ஏப்.21 ) ஈஸ்டர் திருநாளில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதன் ஓராண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

குண்டு வெடிப்பு

இலங்கையில் நடைபெற்ற அந்த குண்டுவெடிப்பில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் . 500 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த தாக்குதலில் இலங்கை மிக பயங்கரமாக சீர்குலைந்து போனது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.

In Pictures: Sri Lanka Easter Sunday bombings | Sri Lanka | Al Jazeera

இந்த கோர சம்பவத்தின் நினைவு நாளான இன்று இலங்கை முழுவதும் மக்கள், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மகிந்த ராஜபக்சே

நினைவுநாளையொட்டி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு ஏப். 21 ல் நடந்த ஞாயிறு தாக்குதல் போர்க்காலத்தை விட கொடூரமானது. ஆசியாவை மட்டுமின்றி உலகையே அச்சுறுத்தும் விதமாக நடந்த தாக்குதல் ஆகும்.

Mahinda Rajapaksha swears in as new Prime Minister of Sri Lanka

கடந்த காலத்தில் 1995 ல் நடந்த டோக்கியோ விஷ வாயு தாக்குதல், ஒக்லஹோமா தாக்குதல், 2005 ல் நடந்த லண்டன் குண்டு வெடிப்பு சம்பவம் , 2008 மும்பை தாக்குதல், சேதத்தை விட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் கொடியாதானதாக இருந்தது. தற்கொலை படை தாக்குதல் இலங்கைக்கு புதிது அல்ல. ஆனால் ஏப்21 தாக்குதல் வேறுவிதமானது” எனக்கூறியுள்ளார். கொழும்பு பேராயர் மெல்கம் கத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈஸ்டர் தாக்குதலில் மறைந்தவர்களை நினைத்து மெழுகு தீபம் ஏற்றுமாறு கேட்டுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here