அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட தமிழர் – வெள்ளை மாளிகை அறிக்கை

0

அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ் பெற்ற அறிவியல் அமைப்பு அந்நாட்டில் உள்ள தேசிய அறிவியல் வாரியம். அதன் உறுப்பினராக தமிழர் சுதர்சன் பாபுவை நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

யார் இந்த சுதர்சன் பாபு..?

சுதர்சன் பாபு கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி தொழிநுட்ப கல்லூரியில் 1986-ம் ஆண்டு பொறியியல் படிப்பும், 1988ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டியில் தொழில்துறை உலோகவியலில் முதுநிலை பட்டபடிப்பும் முடித்தவர். அதன் பின்னர் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் எனது குறிப்பிடத்தக்கது. இவர் மேம்பட்ட உற்பத்தி, சேர்க்கை உற்பத்தி, உலோகவியல் போன்ற பொறியியல் பிரிவுகளில் 21 வருட அனுபவம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதர்சன் பாபு அவர்கள் ஏற்கனவே ப்ரெடிசென் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஆகவும், ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவரை 6 ஆண்டுகளுக்கு தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இதற்கு முன்னதாக தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினர்களாக சேதுராமன் பஞ்சநாதன், சுரேஷ் வி. கரிமெல்லா ஆகிய அமெரிக்க இந்தியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here