99 பேரின் தவறினால் 16 லட்சம் பேரை தண்டிக்க முடியாது – குரூப் 4 தேர்வு ரத்து வதந்தி குறித்து அமைச்சர் ஜெயக்குமார்..!

1

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா மற்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலசோனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,

முறைகேடு புகார் வந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் முறைகேடு இல்லாமல் அரசுத் தேர்வுகள் நடத்தப்படும். இந்த முறைகேடு புகாரால் டிஎன்பிஎஸ்சியின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கக்கூடாது. தவறு செய்த கறுப்பு ஆடுகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பெரும் புள்ளியாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குரூப் 4 முறைகேட்டில் தவறு இழைத்தவர்கள் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. ஒரு சில மையங்களில் நடந்த முறைக்கேட்டால் ஒட்டுமொத்தமாக குறைகூற கூடாது.

வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும். 16 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வை 99 பேருக்காக ரத்து செய்வது நியாயமாக இருக்காது. குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு இல்லை. போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த தனி சட்டம் கொண்டு வரப்படும் என கூறினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

  1. மற்ற தேர்வு மையங்களில் இதே அதிகாரிகள் வேறு நபர்கள் மூலம் தவறு செய்து இருக்கலாம். மேலும் அதிக மதிப்பெண் பெராமல் நடுத்தர தர வரிசை பெற்று இருந்தால் அவர்களை கண்டு பிடிப்பது சிரமம். ஆகவே சரியான முறையில் விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை கண்டு பிடிக்க வேண்டும். இதேமாதிரி இந்த ஆண்டு மட்டும் தான நடந்தது ?
    எங்களை போன்று படித்து கொண்டு இருப்பவர்கள் இறுதி வரை படித்து கொண்டு தான் இருக்க முடியும் போல….
    இந்த தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்பது எனது கருத்து….( பாலிடெக்னிக் தேர்வு இதே மாதிரி முறைகேட்டில் தான் ரத்து செய்யப்பட்டது) ரத்துசெய்தால் எப்படி 16 லட்சம் பேர் எப்படி பாதிக்க படுவார்கள்….
    ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் அப்பொழுது தான் உண்மையாக படித்தவர்கள் வெற்றி பெறுவார்கள்….
    குற்றம் நடந்தது நிரூபிக்கப்பட்டு உள்ளது அதில் என்ன சிறிய குற்றம் பெரிய அளவில் குற்றம் ,குற்றம் நடந்தது உண்மை எனவே ரத்து செய்வது தான் சரி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here