Wednesday, June 26, 2024

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

Must Read

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை:

நேற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணி அளவில் ஆந்திர கடற்கரை காக்கி நாடா அருகே கரையினை கடந்து தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, செங்கல்பட்டு, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், திருநெல்வேலி, தென்காசி, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அதே போல் நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும். வெப்பநிலை தமிழகத்தில் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மழைப்பதிவு:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை பகுதியில் அதிகபட்சமாக 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது, கோவையில் உள்ள சின்னக்கல்லார் பகுதியில் 9 செ.மீ, சோலையூர், நடுவட்டம் பகுதிகளில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் தீபாவளி ரொக்கப்பரிசு?? எதிர்பார்ப்பில் மக்கள்!!

அவலாஞ்சி, கோவையில் உள்ள சின்கோனா பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக பெரியாறு, பாபநாசம் பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

அக்டோபர் 13 மற்றும் 14 தேதிகளில் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

வெப்ப அலை எதிரொலி.. 2 நாளில் 20 பலி?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெப்ப...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -