தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – பெற்றோர்களின் கருத்து இது தான்!!

0
tn school
34 அரசு பள்ளிகளை நிரந்தரமாக மூட உத்தரவு - மாநில கல்வித்துறை திடீர் முடிவு!!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டபோது, பெரும்பாலான பெற்றோர்கள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறத்தால் போதுமானது என்று கூறியிருக்கின்றனர்.

கருத்துக்கணிப்பு:

கொரோனா லாக் டவுனில் மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து நாடு முழுவதும் 19,000 கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் சுமார் 69% பெற்றோர்கள் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளை வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகோ அல்லது அடுத்த கல்வியாண்டின் துவக்கத்திலோ திறந்தால் போதும் என தெரிவித்துள்ளனர். கொரோனா மேலும் பரவி வரும் சூழ்நிலையில் அவர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். வெறும் 23% பெற்றோர்கள் மட்டுமே ஜனவரியில் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் அதை பயன்படுத்த 26% பெற்றோர் மட்டுமே தயாராக உள்ள நிலையில் 56% பெற்றோர்கள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் விளைவுகள் குறித்த விளக்கங்களுக்கு மேலும் மூன்று மாத காலமோ அல்லது அதற்கு மேலும் கூட காத்திருக்க தயார் என தெரிவித்துள்ளனர்.

ஒரே வாகனத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் – நெல்லையில் தொண்டர்கள் குஷி!!

கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் சில மாநிலங்கள் மட்டும் கடந்த நவம்பரில் பள்ளிகளை திறந்தன. ஆனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படவே பள்ளிகளை மீண்டும் மூடின. தடுப்பூசி வரும் வரையில் பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என டெல்லி முதல்வர் ஏற்கனவே அறிவித்து விட்டார். கேரளா, அஸ்ஸாம், உத்திரபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் இம்மாதம் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முறையிலான மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளை திறக்க அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான கருத்து கேட்பு நடவடிக்கை ஜனவரி 8ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here