பொங்கல் பரிசு ரூ 2500 – உற்சாகத்துடன் வாங்கி சென்ற பொதுமக்கள்!!

0

வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசின் பொங்கல் பரிசாக ரூ 2500 இன்று முதல் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் வழங்கப்பட்டது. இதனை பொது மக்கள் உற்சாகத்துடன் வாங்கி சென்றனர்.

பொங்கல் பரிசு

தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகை மாநிலம் முழுவதும் விநியோகிக்கபடும் என கடந்த மாதம் 21 ம் தேதி அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்புடன் பணத்தொகையும் வழங்கப்பட்டது. 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 குடும்பங்களுக்கு ஜெயலலிதா, பழனிச்சாமி உருவ படம் பொறித்த பையில் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முந்திரி 20 கிராம் ,உலர் திராட்சை 20 கிராம் ஏலக்காய் 5 கிராம் மற்றும் ரூ 2500 வழங்கப்பட்டது. அதனுடன் ஒரு முழு கரும்பும் கொடுக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

new order about the issue of chickpeas in ration shops
new order about the issue of chickpeas in ration shops

கொரோனா பரவல் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து அட்டை தாரர்களுக்கும் ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டது . இந்த டோக்கனின் அடிப்படையில் காலையில் 100 பேருக்கும் மாலையில் 100 பேர் வீதமாக பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது .அனைத்து ரேஷன் கடைகளிலும் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் டோக்கனில் குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு முன்னதாகவே மக்கள் வந்து வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர். மேலும் ரொக்கப்பணத்தை எந்த கவரிலும் போட்டு வழங்கக்கூடாது எனவும், அலுவலக ஊழியர்கள் பணத்தை எண்ணி கைகளில் கொடுக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

தனது மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ் – ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்!!

அதனால் ரொக்கப்பணத்தை எண்ணி அட்டை தாரர்கள் கைகளிலேயே வழங்கப்பட்டது. பொங்கல் பரிசை பெற்றவுடன் அனைத்து அட்டை தரர்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பட்டது மேலும் 13 ம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு பொருள் வழங்கும் நேரம் காலை 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும், மதியம் 2:30 முதல் மாலை 5:30 வரையும் ஆகும். டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தால் மாத்திரம் போதும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது பொங்கல் பரிசை பெற்று சென்றவர்களிடம் உற்சாகம் பொங்கி வந்ததை கண் கூடாக காண முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here