தனது மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ் – ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்!!

0

ஆந்திரா மாநிலம் திருப்பதி கல்யாணி அணை காவல் பயிற்சி பள்ளியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஷாம் சுந்தர். இவரது மகள் குண்டூர் டவுனில் கூடுதல் ஆணையராக பணியாற்றுகிறார். தற்போது இருவரும் ஒரே இடத்தில் சந்தித்த பொது ஓர் நெகிழ்ச்சியான சம்பவம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா:

இன்றைய காலங்களில் தங்களது உயர் அதிகாரிகளுக்கு கீழே பணி புரியும் அதிகாரிகள் சல்யூட் அடித்தே காலங்களை ஓடுகின்றனர். மேலும் அரசியல் வாதிகளுக்கு போலீஸ்காரர்கள் அனைவரும் சல்யூட் அடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் ஓர் நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் திருப்பதியில் கல்யாணி அணை காவல் பயிற்சி பள்ளியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் ஷாம் சுந்தர் என்பவர். இவருக்கு பிரசாந்தி என்னும் மகள் உள்ளார். இவர் கடந்த 2018ம் ஆண்டில் நடந்த ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலகின் 25வது மிகப்பெரிய பணக்காரர் ‘அலிபாபா’ நிறுவனர் ஜாக் மாவை காணவில்லை!!

அதன்பிறகு இவர் குண்டூர் டவுனில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார். தற்போது மாநில பிரிவிற்கு பின்பு முதல் முறையாக ஆந்திர மாநில காவல் துறையின் முதல் தற்காலிக பயிற்சி மற்றும் சாகச நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க கூடுதல் ஆணையர் பிரசாந்தி மற்றும் ஷாம் சுந்தர் இருவரும் அங்கு பாதுகாப்பு பணிக்காக வந்தனர். தந்தை மகள் இருவரும் ஒரே இடத்தில சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதுவரை முகம் தெரியாத பெரிய அதிகாரிகளுக்கு சல்யூட் செய்து வந்த ஷாம் சுந்தர் தற்போது தனது மகள் டிஎஸ்பி பிரசாந்தி என்பவருக்கு பெருமையுடன் தனது சல்யூட் செய்தார். இவருக்கு பதில் அளிக்கும் வகையில் பிரசாந்தியும் சல்யூட் செய்தார். இந்த நிகழ்வின் போது ஷாம் சுந்தரின் கண்கள் அளவில்லாத மகிழ்ச்சியால் கலங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here