உலகின் 25வது மிகப்பெரிய பணக்காரர் ‘அலிபாபா’ நிறுவனர் ஜாக் மாவை காணவில்லை!!

0

சீனாவின் மிகப்பெரிய தொழில் அதிபரும், கோடீஸ்வரருமான அலிபாபா நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அலிபாபா நிறுவனம்

சீனாவின் அலிபாபா மற்றும் ஆன்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜாக் மா உலகின் பணக்கார தொழில் அதிபர்களில் ஒருவர். இவர் கடந்த இரண்டு மாதங்களாக பொது நிகழ்ச்சி ஒன்றிலும் தோன்றாமல், வெளியில் வராமலும் இருப்பதால் , ஜாக் மா வை காணவில்லை என சந்தேகத்தின் பேரில் கேள்வி எழுப்பியுள்ளன உலக நாடுகள். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதி , சீன அரசின் மீது தனது குற்றசாட்டுகளாகிய எதிர்ப்புகளை வைத்துள்ளார் .அதாவது சீன அரசு தொழில் நிறுவனங்களின் மீது விதித்து வரும் பல கட்டுப்பாடுகளை குறித்து கேள்வி எழுப்பி வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இத்தகைய கட்டுபாடுகளை விதிக்கும் அரசு ‘ வயோதிபர்கள் மன்றம்’ எனவும் இவர்கள் மாற வேண்டும் எனவும் கூறி வந்தார். அரசுக்கு எதிராக இத்தகைய கருத்துக்களை முன் வைத்த ஜாக் மா மீதும் அவரது நிறுவனமான அலிபாபா மீதும் சீன அரசு தாக்குதல்களை முன் வைத்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு அலிபாபா நிறுவனம் தனது போட்டியாளர்களுக்கு தகுந்த வாய்ப்பினை தராமல் நயவஞ்சகமாக செயல்பட்டிருக்கிறது என்று அரசு தரப்பில் குற்றசாட்டுகள் வெளிவந்துள்ளது.

கடந்த நவம்பர் இறுதியில் தொழில் முனைவோரை கண்டறியும் தனது சொந்த நிகழ்ச்சியில் ஜாக் மா நடுவராக பங்கேற்காமல், அலிபாபா நிறுவனத்தின் மற்றுமொரு முக்கியமான அதிகாரி பங்கேற்றார் . ஆனால் அலிபாபா தரப்பில் அவர் வேறு ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருப்பதாக கூறப்பட்டது. மேலும் ஜாக் மா சீனாவை விட்டு எங்கேயும் வெளியேறக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தெரிகிறது. இரண்டு மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காத ஜாக் மா காணவில்லை எனவும், அவரைப்பற்றிய உண்மைகளை சீன அரசு மறைப்பதாக அரசின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here