பெருமாளின் முழு அருளையும் பெற புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு!!

0
puratasi
puratasi

புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பது நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய நல்வழி என்றே கூறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் எப்படி பூஜை செய்தால் பெருமாளின் முழு அருளும் கிடைக்கும் என பார்க்கலாம்.

புரட்டாசி விரதம்:

புரட்டாசி மாசத்தில் விரதம் இருந்து சனிக்கிழமைகளில் கோவிலுக்கு செல்வது வழக்கம். இவ்வாறு நாம் பின்பற்றி வருவதால் பெருமாளின் அருளை பெற்று செல்வ செழிப்போடு வாழலாம். மேலும் இந்த புரட்டாசி மாத விரதத்தில் அறிவியல் காரணமும் கலந்துள்ளது. ஏனெனில் இதுவரை ஏற்பட்ட வெப்பத்தினை பூமி வெளிப்படுத்தும். அதோடு அசைவ உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தும். எனவே தான் நம் முன்னோர்கள் விரதத்தை கடைபிடித்து வந்துள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

puratasi viratham
puratasi viratham

மேலும் புரட்டாசி மாதம் புதன் பகவானுக்கு உரிய காலமாகும். புதன் விஷ்ணுவின் அம்சமாக பார்க்கப்படுகிறார். தமிழ் மாதங்களில் 6வது மாதமான புரட்டாசி மாதத்தில் புதன் பகவான் ஆட்சி செய்கிறார். எனவே சைவ பிரியனான புதன் பகவானுக்கு அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து வந்தால் நன்மை கிட்டும். மேலும் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து வந்தால் சனி பகவானால் ஏற்படக் கூடிய சங்கடங்கள் மற்றும் கஷ்டங்கள் அகலும்.

விரதம் இருக்கும் முறை

புரட்டாசி சனிக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்தமான 4-6 மணிக்குள் எழுந்து வீட்டை சுத்தம் செய்து தலைக்கு எண்ணெய் வைக்காமல் குளித்து நெற்றியில் நாமம் இட்டு வீட்டின் முன் அழகிய கோலம் இட வேண்டும். புதிதாக விளக்குகளை ஏற்றி இறைவனுக்கு ஏதேனும் நெய்வேத்தியம் படைக்க வேண்டும். அதன்பின் ஒரு சொம்பில் சிறிது அரிசி மற்றும் நாணயத்தை போட்டு 4 வீட்டிற்கு சென்று அரிசியை யாசகமாக பெற வேண்டும்.

perumaal
perumaal

அந்த அரிசியில் சமைத்து கடவுளுக்கு படைக்க வேண்டும். கடவுளுக்கு படைத்தவுடன் பிறகு காக்கைக்கு அன்னமிட வேண்டும். அதன்பிறகு குழந்தைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். அவர்கள் சாப்பிடுவதற்கு முன் ‘கோவிந்தா கோவிந்தா’ என உச்சரித்து விட்டு சாப்பிட வேண்டும். இதனால் பெருமாளே வீட்டிற்கு வருவார் என்பது ஐதீகம். அதன்பிறகு தான் நாம் சாப்பிட வேண்டும். இவ்வாறு புரட்டாசி சனிக்கிழமைகளில் பூஜை செய்து வந்தால் பெருமாளின் முழு அருளையும் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here