6000 இளைஞர்களுக்கு வேலை, 60,000 பேருக்கு பயிற்சி – பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு!!

0

ஆசியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,000 இளைஞர்களை வேலைக்கு அமர்த்த சிட்டிகுரூப் திட்டமிட்டு உள்ளது. மேலும் 60 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிளை வழங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. தற்போது நிலவும் வேலையின்மை பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வேலையில்லா திண்டாட்டம்:

கொரோனா ஊரடங்கில் பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இதன் காரணமாக லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் வேலை இழந்தனர். வருமானம் இல்லாமல் போன காரணத்தால் பல தற்கொலை சம்பவங்களும் ஆங்காங்கே நிறைவேறி உள்ளது. இந்நிலையில் வேலையில்லா திண்டாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிட்டி குரூப் நிறுவனம் ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சிளை வழங்க முடிவு செய்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்காக அந்நிறுவனம் சார்பில் 2023 ஆம் ஆண்டில் ஆசியாவில் குறைந்த வருமானம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 257 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. உலகின் மக்கள்தொகையில் பாதி இளைஞர்கள் ஆசியாவில் வசிக்கின்றனர். அவர்களில் 20 சதவீதத்தினர் மட்டுமே முறையான வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

செப்.21 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

சிட்டி குரூப் நிறுவனத்தின் வங்கிகள், முதலீடு சந்தைகள் மற்றும் ஆலோசனை, பத்திர சேவைகள் மற்றும் நுகர்வோர் வங்கி உள்ளிட்ட பல்வேறு வணிகங்களில் இந்த வேலைகள் வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். மியான்மார், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இளைஞர்கள் இதில் அதிகளவு வாய்ப்புகளை பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here