செப்.21 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0

அசாம் மாநிலத்தில் திங்கள்கிழமை (செப்.21) முதல், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என மாநில அரசு அறிவித்து உள்ளது. முதல் கட்டமாக 15 நாட்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நிலைமையை ஆய்வு செய்த பின் வகுப்புகளை தொடரலாமா? வேண்டாமா? என முடிவு செய்யப்பட உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

அசாமில் இதுவரை 1,50,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 1,21,610 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 528 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மார்ச் 15 முதல் மூடப்பட்டுள்ளன, இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பயின்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் போதிலும், உயர்நிலை பள்ளிகள் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு திங்கள்கிழமை (செப்.21) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

அனைத்து அரசு பள்ளிகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில், தனியார் பள்ளி நிர்வாகங்கள் இது குறித்து முடிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் கட்டாயமாக பள்ளிகளுக்கு வர வேண்டியதில்லை. பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் எழுத்துப்பூர்வமாக தங்கள் ஒப்புதலை வழங்கிய பிறகே மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

schools-mask

ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகள் எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 9 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும், அதே சமயம் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெற உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 4 கிலோ அரசி மற்றும் ரொக்க பணம் – மாநில அரசு முடிவு!!

ஒரு வகுப்பறையில் ஒரே சமயத்தில் 20 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்கள் இரண்டு பிரிவுகளாக மாற்றப்பட்டு காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முதல் பிரிவும், மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை 2வது பிரிவுக்கும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்பு, அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் தொற்று இல்லாதவர்கள் மற்றும் வேறு எந்த சுகாதார சிக்கல்களும் இல்லாதவர்கள் மட்டுமே வகுப்புகள் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஏற்கனவே ஆந்திர மாநிலத்திலும் செப்.21 முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் அது குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here