Home விளையாட்டு முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!!

முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!!

ஐபிஎல் போட்டியில் 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய டேவிட் வில்லிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஆன வில்லி கடைசியாக அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார்.

டேவிட் வில்லி:

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி அவரும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். இதனால் மீதமுள்ள விளையாட்டுகளில் அவர் பங்கேற்க இயலாது. 30 வயதான வில்லி கடந்த மாதம் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்காக கடைசியாக விளையாடினார். அவர் தனது வாழ்க்கையில் இதுவரை 49 ஒருநாள் மற்றும் 28 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Chennai Super Kings players practice session in Mohali on April 14, 2018

மேலும் வில்லி, டாம் கோஹ்லர்-கேட்மோர், ஜோஷ் போயஸ்டன் மற்றும் மேத்யூ ஃபிஷர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக யார்க்ஷயர் அறிவித்து உள்ளது. இதனால் வரும் டி20 லீக் போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் கொரோனா வழிகாட்டுதல்கள் படி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here