மாநில துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் சி.என் அஸ்வத் நாராயண் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் இது தெரிய வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

கர்நாடக மாநிலத்தில் இதுவரை 5,02,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 7,808 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 3,94,026 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அம்மாநில முதல்வர் பிஎஸ் எடியுரப்பா அவர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்ட அதில் இருந்து மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பருவமழை சட்டசபை கூட்டத்தொடர் செப்டம்பர் 21 முதல் தொடங்க உள்ளது. இதன் காரணமாக 72 மணி நேரத்திற்கு முன்னர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் என கூட்டத்தில் பங்கேற்க உள்ள அனைவர்க்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

6000 இளைஞர்களுக்கு வேலை, 60,000 பேருக்கு பயிற்சி – பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு!!

அதற்கான முடிவுகள் இன்று வெளியான நிலையில் துணை முதல்வர் சி.என் அஸ்வத் நாராயண் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, நான் சனிக்கிழமையன்று கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். அதில் எனக்கு தொற்று உறுதியாகி உள்ளது. எனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாத காரணத்தால் மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here