பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு நிஜத்திலேயே குழந்தை பிறந்தாச்சு – குவியும் வாழ்த்துக்கள்!!

0
Pandian-Stores-Hema
Pandian-Stores-Hema

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீனாவிற்கு சீரியலில் பெண் குழந்தை பிறந்ததை அடுத்து தற்போது அவருக்கு நிஜமாகவே ஆண் குழந்தை பிறந்துள்ளது. மீனாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் 2018ம் ஆண்டு தொடங்கி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கூட்டு குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை எதார்த்த கதையமைப்பின் மூலம் அந்த சீரியல் வெளிப்படுத்தியிருக்கும்.

hema
hema

அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்பதால் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் அண்ணன் தம்பி கதைகள் ஒர்கவுட் ஆக தான் செய்தது.

pandian stores
pandian stores

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸும் இடம் பெற்றுள்ளது. இதில் மருமகளாக நடிப்பவர் தான் மீனா. ஆரம்பத்தில் இவரின் கதாபாத்திரத்தை வெறுத்து வந்த ரசிகர்கள் நாட்கள் செல்ல செல்ல ரசிகர்களின் செல்ல பிள்ளையாகவே மாறிவிட்டார். இந்த கதையில் மீனா கர்ப்பமாக இருப்பதாக கதை கரு உருவானது. அந்த அதிர்ஷ்டமோ என்னவோ நிஜ வாழ்க்கையிலும் அவர் கர்ப்பமானார்.

pandian stores
pandian stores

அதனை தொடர்ந்து ரீல் வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு வளைகாப்பு நடந்தது. அதற்கான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியானது. தற்போது ஒளிபரப்பாகும் ஒரு வார எபிசோடில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்ததாக காட்டப்பட்டது.

pandian stores meena
pandian stores meena

ஆனால் அவருக்கு நிஜமாகவே ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து அவர் சீரியலில் நடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here