ஊரடங்கை மீறியதால் 2 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் பறிமுதல் – 1.46 கோடியை தாண்டிய அபராதம்.!

0

கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. இது இந்தியா உட்பட 209 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்க பட்டது. மேலும் இரண்டாவது முறையாக மே 3 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. இதனால் தீவிர பாதுகாப்பு பணியில் காவல் துறை இயங்கி வருகிறது.

காவல் துறை

Over 15,000 cases booked in Tamil Nadu for violating lockdown ...

இந்த கொரோனாவிற்கு மருந்துகள் ஏதும் இதுவரை கண்டறியப்பட வில்லை. சமூக விலகல் ஒன்றே இதற்கான தற்போதைய மருந்து. எனவே மே 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் பொதுமக்கள் வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

வழக்குப்பதிவு

இந்நிலையில் ஊரடங்கை மீறியவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது. ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,71,389 கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,27,325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,55,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ.1.46 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seized vehicles to be cleared from police stations - The Hindu

வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here