1.3 கோடி ரூபாய் கொரோனா நிதியுதவி வழங்கிய ‘தளபதி விஜய்’ – யாருக்கு? எவ்வளவு? முழு விபரங்கள் இதோ..!

0

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மாநில அரசும் மத்திய அரசும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.கொரோனாவின் பிடியில் சிக்கி ஒட்டுமொத்த சினிமாத்துறையும் சின்னாபின்னமாகி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணப் பணிகளுக்கும் பல்வேறு தொழில்களில் இருந்து பிரபலமான நபர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள் நிவாரண உதவி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் போராடிக்கொண்டு இருக்கிறோம். இதனால் உலகமே முடங்கப்பட்டது, அனைத்து துறையும்,தொழில்களும் முடங்கின.கொரோனவால் பாதிக்கபட்டவர்களுக்கு எல்லா மொழி சினிமா பிரபலங்கள் பலர் முன் வந்து நிவாரண உதவி மற்றும் பிரதமர் நிவாரண உதவி என உதவி வருகின்றனர்.

நடிகர் அஜித்,விஜயகாந்த்,கமல் ஹாசன், ரஜினிகாந்த், லாரன்ஸ், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற பல நட்சத்திரங்கள் உதவி கரம் நீட்டியுள்ள நிலையில், தற்போது ‘அண்ணாத்த’ பட தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் தனது சன் குழுமம் சார்பாக கொரோனா வைரஸ் நிவாரண நடவடிக்கைகளுக்காக ரூ. 10 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார் மற்றும் பல நட்சத்திரங்கள் வழங்கி வருகின்றனர்.

தளபதியை கேலி செய்த நெட்டிசன்

சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தளபதி விஜயின் பெயர் சற்று அடிபட்டு வந்தது. அஜித் உதவியுள்ளார் விஜய்க்கு என ஆச்சு என அஜித் ரசிகர்கள் கேலி செய்து வந்தனர்தமிழ் மக்களுக்காக எதையும் செய்வர் இப்போ எங்கே போனார்? கொஞ்சம் கூட இரக்கம் காட்டாத விஜய்,மக்களுக்காக தானாக முன் வரும் விஜய் இப்போ எங்கே? IT ரைட்ஆ? மக்களுக்கு சமூக அறிவுரை கூறும் விஜய் காணோம்.

#ripactorvijay என பல மீம்ஸ் மற்றும் சமூக வலைத்தளங்களில் காலப்பகுதியில் எதுவித நிதியும் வழங்காமல் இருந்தமை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியிருந்தது.இதை பொறுத்த கொண்ட தளபதி புள்ளைங்கோ அவர்களால் முடிந்த உதவியை ரசிகர் மன்றம் மூலமாக வழங்கி வந்தனர் அனால் இப்பொழுது ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய்யின் வாத்தி ரைடு

தளபதி விஜய் கொரோனா நிவாரண உதவிக்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிரதமரால் அறிவிக்கப்பட்ட PM CARES நிதிக்கு 25 லட்ச ரூபாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய், பெப்சிக்கு 25 லட்ச ரூபாய், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், பாண்டிச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் என வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தளபதி விஜய் 1.3 கோடி ருபாய் உதவி தொகையாக அளித்துள்ளார். அது மட்டுமின்றி ஒரு மிகப்பெரிய தொகையை தனது ரசிகர் மன்றங்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். அதன் மூலமாக அவர்கள் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

அதிர வைக்கும் வெறித்தனமான புல்லைங்கோ

வெறித்தனமான தளபதி ரசிக புல்லைங்கோ அனைவரும் இதனை கண்டு வியந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பதிலடியாக பல மீம்ஸ் மற்றும் சமூக வலைத்தளங்களில் கேட்ட கேள்விகளுக்கு பல வண்ணமாக பதிலளித்து வருகின்றனர்.சமூக வலைத்தளங்களை அதிர வைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here