தனுஷ் படத்தில் இணைந்த மூக்குத்தி அம்மன் ஸ்மிருதி வெங்கட் – குஷியில் ரசிகர்கள்!!

0

தனுஷின் புதிய படத்தில் அவருடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த நடிகை ஸ்மிருதி வெங்கட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் 43

தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்திற்கு பிறகு அவர் நடிக்கவுள்ள புதிய படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். படத்தின் பெயர் முடிவாகாத நிலையில் இப்படத்திற்கு “தனுஷ் 43” என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோஹனன் நடிக்கவுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

G.V. ப்ரகாஷ்குமார் இசையமைக்கிறார். மேலும் தனுஷ் அவரது அண்ணன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் 43 படத்தில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நயன்தாரா மற்றும் R.J. பாலாஜி நடிப்பில் உருவாகி ott தளத்தில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை ஸ்மிருதி வெங்கட். இவர் ஏற்கனவே “தடம், பற்றவைத்த நெருப்பொன்று” உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் “தனுஷ் 43” படத்திலும் தனுசுக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here