#INDvsAUS டெஸ்ட் தொடர் – அறிமுக போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய சைனி!! குவியும் பாராட்டுகள்!!

0

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டியில் ஆறுமுக வீரராக நவதீப் சைனி களமிறங்கினார். தனது முதல் போட்டியிலையே விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி தற்போது தங்களது 3 வது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இந்தியா அணி வீரர்கள் காயம் காரணமாக பலர் தொடரில் இருந்து விலகியுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்த போது ஏற்பட்ட காயத்தினால் ஷமி டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் அறிமுக வீரராக முகமத் சிராஜ் களமிறக்கப்பட்டார். அதன்பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது உமேஷ் யாதேவிற்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் போட்டியின் நடுவே பெவிலியன் திரும்பினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறார். மேலும் அவர் குணமாவதற்கு 3 வார காலம் ஆகும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். எனவே அவருக்கு பதில் 3 வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

‘சித்ராவிற்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’ – ஹேமந்த் ஜாமின் மனு தாக்கல்!!

அதன் பிறகு நேற்று இந்தியா அணி 3 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 11 பேர் கொண்ட பெயர் பட்டியல் வெளியானது. அதில் யாரும் எதிர் பாரத வகையில் உமேஷ் யாதேவிற்கு பதில் நவதீப் சைனியின் பெயர் இடம்பெற்றிருந்தது. அனைவரும் இந்த தகவலினால் அதிர்ந்தனர். மேலும் நவதீப் சைனி இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தனது அறிமுக போட்டியிலேயே ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன் வில் புகோவிஸ்கி விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதுவே இவரது டெஸ்ட் தொடரில் முதலாவது விக்கெட். தற்போது இவரை பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

லைவ் ஸ்கோர்:

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட்களை இழந்துள்ளது. இந்தியா தரப்பில் சிராஜ் மற்றும் சைனி தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். களத்தில் லபூசான் 67 ரன்களும் ஸ்மித் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here