‘சித்ராவிற்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’ – ஹேமந்த் ஜாமின் மனு தாக்கல்!!

0
அதிரடியாக திசை மாறிய விஜே சித்ரா மரண வழக்கு - ஹேமந்த்துக்கு எதிராக நண்பர் அளித்த வாக்குமூலம்!!

நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அவரது கணவர் தனக்கும் சித்ராவுக்கும் எந்த பிரச்சனையும் கருத்துவேறுபாடுகளும் இல்லை. எனக்கு எதிராக காவல் துறையினர் கூறும் குற்றசாட்டுகள் பொய்யானது என கூறி கணவர் ஹேம்நாத் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார்.

நடிகை சித்ரா தற்கொலை

நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9 ம் தேதி சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக, அவர் தற்கொலை செய்த போது அவருடன் இருந்த அவரது கணவர் ஹேமந்த்தை போலீஸ் விசாரணை செய்து வந்தார். விசாரணையில் ஹேம்நாத் சித்ராவை தற்கொலை செய்ய தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மரணம் தொடர்பான சந்தேகத்தில் சித்ராவின் தாயார் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரி அனுப்பிய மனுவை கருத்தில் கொண்டு இந்த வழக்கு மத்திய குற்ற பிரிவிற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே ஆர்டிஓ விசாரணையின் கீழ் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர் மரணம் தொடர்பான பல சந்தேகங்களும் கருத்துக்களும் ஊடகம் வாயிலாக வெளிவந்தன.மேலும் ஹேமந்த் மீது பண மோசடி வழக்கும் போடப்பட்டது.

இந்நிலையில் காவலில் உள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் ‘ தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவேண்டாம் என கூறியதால் சித்ரா தற்கொலை செய்துள்ளதாக காவல் துறையினர் கூறும் குற்றசாட்டு பொய்யானது. கடந்த ஆகஸ்ட் மாதம் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். எனக்கும் சித்ராவுக்கும் எந்த கருத்துவேறுபாடுகளும் இருந்ததில்லை. சித்ரா என் குடும்பத்துடன் நெருக்கமாக இருப்பது அவரது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. தான் எந்த குற்றமும் செய்யாததால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிப்பு – காளைகளுக்கும் முன்பதிவு அவசியம்!!

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணையிலும் சிபிஐ விசாரணையிலும் இருப்பதால் பதிலளிக்க இரண்டு வார அவகாசம் தருமாறு காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்குவதில் எதிர்ப்பு உள்ளதாக சித்ராவின் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ பிரிவினரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்பிற்கு உத்தரவிட்டார் நீதிபதி. வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கும் உத்தரவிடப்பட்டது. மேலும் ஜனவரி 18 ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும் படி காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here