பொங்கலுக்கு “மாஸ்டர்” மட்டுமே ரிலீஸ் – திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்!!

0

100 சதவீத பார்வையாளர்கள் என்ற அறிவிப்பினை அரசு திரும்ப பெற்றால் திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் மட்டுமே திரையிடபடும் என்று திரையரங்கு சங்கங்கள் குரல் எழுப்பியுள்ளன.

100 சதவீத இருக்கை அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்த மாதங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. திரையரங்குகளில் அனைத்து தரப்பினரும் வரும் சூழல் ஏற்படும். இதனால் எளிதாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்படியான நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு தீபாவளி பண்டிகையை ஒட்டி திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்டது. அதிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தன. நடிகர் விஜய் மற்றும் நடிகர் சிம்பு சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வருடன் திடீர் சந்திப்பினை மேற்கொண்டு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சங்கத்தலைவரின் அறிவிப்பு:

இதனை அடுத்து வரும் பொங்கல் அன்று திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்படும் என்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனை அடுத்து “மாஸ்டர்” மற்றும் “ஈஸ்வரன்” திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளன. அரசின் இந்த உத்தரவிற்கு கடுமையான எதிர்ப்புகள் பல தரப்பில் இருந்து வந்தன. தற்போது புதிய வகை கொரோனா அதிகமாக பரவி வரும் சூழலில் இது தேவையில்லாதது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

‘மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சென்னைக்கு வருகை’ – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!!

இதனால் தமிழக முதல்வருடன் இது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜா தெரிவித்திருந்தார். இதன் காரணமாக திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறுகையில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி உத்தரவினை அரசு திரும்ப பெற்றால் நடிகர் விஜய் நடித்துள்ள “மாஸ்டர்” படம் மட்டுமே திரையிடப்படும். ஒரு வேளை “மாஸ்டர்” படம் வெளியாவது தள்ளி போனால் நடிகர் சிம்பு நடித்துள்ள “ஈஸ்வரன்” படம் வெளியிடப்படும்” இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here