‘மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சென்னைக்கு வருகை’ – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!!

0

தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை கண்காணிப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் வர்தன் நாளை சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் வரும் வாரங்களில் கொரோனா தடுப்பூசி வெளிவரும் என்று சில தினங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கும் அதனை பதப்படுத்துவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதற்காக பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsAUS 3வது டெஸ்ட் போட்டி – சொதப்பும் இந்திய அணி வீரர்கள்!!

ஹரிஷ் வரதன் வருகை:

தற்போது தமிழ் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை கண்காணிப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் வர்தன் நாளை சென்னை வருகிறார். இந்த தகவலை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவை துவங்கிய விஜயபாஸ்கர், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் இந்த தகவல் கூறினார். மேலும் சென்னை வந்த பிறகு ஹரிஷ் வர்தன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து உரையாடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here