#INDvsAUS 3வது டெஸ்ட் போட்டி – சொதப்பும் இந்திய அணி வீரர்கள்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டி சிறிது நேரம் மழையினால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மழை நின்ற பிறகு போட்டி தொடங்கி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா அணி வீரர்கள் சொதப்பி வருகின்றனர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்தியா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளன. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் வைத்து தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆஸ்திரேலியா அணி சார்பில் தொடக்க வீரராக புகோவ்ஸ்கி மற்றும் வார்னர் துவக்கம் தந்தனர். காயத்தில் இருந்து மீண்டு வந்த வார்னர் இந்த போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சிராஜ் வேகத்தில் வீழ்ந்தார். அதன் பிறகு ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன் லபூசான் களம் வந்தார். இருவரும் ஜோடி சேர்ந்து தங்களது அணிக்கு ரன்களை சேர்த்து வந்தனர். அப்போது சிட்னியில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் பின்பு மீண்டும் போட்டி துவங்கியது.

இந்தியா அணி வீரர்கள் சொதப்பல்:

ஆனால் இன்றைய போட்டியில் இந்திய அணி வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பி வருகின்றனர். இன்று அஸ்வின் அபாரமாக பந்து வீசி வருகிறார். அவர் வீசிய 22 வது ஓவரில் புகோவ்ஸ்கி வழங்கிய எளிய கேட்சை பண்ட் தவறவிட்டார். இதனால் அஸ்வின் கோபமடைந்தார். அதன் பிறகு சிராஜ் பந்தில் புகோவ்ஸ்கி பண்ட் இடம் கேட்ச் கொடுத்தார். இது கொஞ்சம் கடினமான கேட்ச் ஆனால் இதனையும் பண்ட் தவறவிட்டார். இவர் தான் இப்படி என்றால் பும்ராஹ்வும் இன்று பீலடிங்கில் சொதப்பினார்.

காதலியை பார்க்க சென்ற காதலன் வெட்டி கொலை – கரூரில் நடந்த கொடூரம்!!

29 வது ஓவரில் புகோவ்ஸ்கி பௌண்டரி அடிக்க முயற்சித்தார். அதனை பும்ராஹ் தடுத்தார். அப்போது 3 வது ரன் எடுக்க முற்சித்தார் புகோவ்ஸ்கி.  மேலும் அவர் பாதி தூரம் ஓடி வந்தார். ஆனால் பும்ராஹ் மெதுவாக த்ரோவ் செய்தார். பந்து கீப்பரிடம் சேர்வதற்குள் புகோவ்ஸ்கி கிரிஸ் உள்ளே சென்றுள்ளார். இந்தியா அணி வீரர்கள் இன்று 3 விக்கெட் வாய்ப்பினை இழந்துள்ளார்கள் இது அவர்களை பாதிக்குமா என்பது விரைவில் தெரியும். அதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புகோவ்ஸ்கி 62 ரன்களில் சைனி பந்தில் தனது ஆட்டத்தை இழந்தார். தற்போது லபூசான் மற்றும் ஸ்மித் களத்தில் நின்று ரன்களை சேர்த்து வருகின்றனர். இந்தியா அணி சார்பில் சிராஜ் மற்றும் சைனி தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

லைவ் ஸ்கோர்:

ஆஸ்திரேலியா -150\2
லபூசான் -57
ஸ்மித் -25

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here