காதலியை பார்க்க சென்ற காதலன் வெட்டி கொலை – கரூரில் நடந்த கொடூரம்!!

1

கரூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார். இதனை பிடிக்காத அந்த பெண் வீட்டார் பெண்ணின் கண் முன்னே அவளது காதலனை குத்திவிட்டு சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர்:

நாம் அனைவரும் மார்டன் உலகில் வாழ்ந்து வந்தாலும் இன்னும் சில இடங்களில் முந்தைய காலங்களில் நடக்கும் சபவங்கள் போல் இன்னும் நடந்து வருகிறது. இன்றைய காலங்களில் காதல் திருமண என்பது ஓர் சாதாரண விஷயம். ஆனால் ஒரு சில இடங்களில் காதலித்து திருமணம் செய்பவர்களை அவரது உறவினர்கள் அல்லது அவர்களது சமூகத்தினர் வாழ விடாமல் துன்புறுத்தி வருகின்றனர் அல்லது கொலை செய்துவிடுகின்றனர். தற்போது இதே போல் ஓர் சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கரூரில் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான் ஹரிஹரன் என்பவர். இவர் அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் மீனாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆணவக்கொலை:

இந்நிலையில் கரூரில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு மீனா சென்றுள்ளார். அவரை சந்திக்க ஹரிஹரன் தனது நண்பர்களுடன் சென்றார். அங்கு சென்று ஹரிஹரன் மற்றும் மீனா இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடிரென்றது அங்கு வந்த மீனாவின் உறவினர்கள் 3 பேர், மீனாவின் கண் முன்னே ஹரிஹரனை கத்தியால் குத்திவிட்டு ஓடினார்கள். மேலும் ஹரிஹரனின் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினர். ஆனால் ஹரிஹரன் மருத்துவர்களின் சிகிச்சையில் பலன் இன்றி தனது உயிரை இழந்தார்.

புதிய விதிமுறைகளை அனுமதிப்பவர்களுக்கு மட்டுமே வாட்ஸ் ஆப் – அமலுக்கு வரும் புதிய அப்டேட்!!

இது குறித்து விசாரணை நடத்திய கரூர் போலீஸ், கொலை செய்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மூவரும் மீனாவின் உறவினர்கள் என்று தெரியவந்துள்ளது. பெண்ணின் பெரியப்பா சங்கர், மாமா கார்த்திகேயன் மற்றொரு உறவினர் வெள்ளைச்சாமி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆணவக்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரிஹரனின் வீட்டில் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில், காதலியின் வீட்டில் இதற்கு சம்மதம் அளிக்கவில்லை. இதனால் தான் ஹரிஹரன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறிவருகின்றனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here