பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் – கடந்த ஆண்டை விட 20% குறைப்பு!!

0

பொங்கல் பண்டிகையை கொண்டாட ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 20% குறைவாகவே பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொங்கல் பண்டிகை:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி முதல் கொண்டாடப்படவுள்ள நிலையில் பணி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் தமது சொந்த ஊருக்கு திரும்புவர். குறிப்பாக சென்னையிலிருந்து அதிக அளவில் பயணிகள் தங்களது ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். தொலைதூர பயணங்களுக்கு வசதியாக ரயிலுக்கு அடுத்தபடியாக இவர்கள் தேர்ந்தெடுப்பது பேருந்து பயணத்தைத்தான். எனவே ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது இவர்களுக்கு வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசு பேருந்துகளில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு துவங்கி விட்ட நிலையில் தற்போது கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு கட்டுப்பட்டு பேருந்துகளை இயக்குவது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பேருந்து நிலையங்களை பிரித்து அமைப்பது, தற்காலிக பேருந்து நிலையங்கள் பற்றிய தகவல்கள், அவற்றிற்கு செல்ல mdc பேருந்து வசதிகள், அறிவிப்பு பலகைகள் வைத்தல், முன்பதிவு மையங்கள் அமைத்தல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்வது குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளை அனுமதிப்பவர்களுக்கு மட்டுமே வாட்ஸ் ஆப் – அமலுக்கு வரும் புதிய அப்டேட்!!


இது குறித்து பேசிய போக்குவரத்து அதிகாரி ஒருவர், சென்ற ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 30,000 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 20% குறைவாகவே பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே பல நிறுவனங்களும், பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு முன்பதிவு செய்தோரின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது. எனவே 80% பேருந்துகளை மட்டுமே இயக்குவது போதுமானது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் தேவை ஏற்பட்டால் இயக்குவதற்கு கூடுதல் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்று கூறினார். மேலும் எங்களது இந்த ஆலோசனைகள் பற்றி போக்குவரத்து துறை அமைச்சரிடம் தெரிவிப்போம். அவர் இறுதி முடிவு எடுத்த பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here