புதிய விதிமுறைகளை அனுமதிப்பவர்களுக்கு மட்டுமே வாட்ஸ் ஆப் – அமலுக்கு வரும் புதிய அப்டேட்!!

0

வாட்ஸ் ஆப் செயலி தற்போது பல அப்டேட்களை செய்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் புதிய விதிமுறைகளுக்கு அனுமதி அளிப்பவர்களுக்கு மட்டுமே வாட்ஸ் ஆப் செயலி பயன்படும் என்று அறிவித்துள்ளனர்.

வாட்ஸ் ஆப்:

தற்போது நாட்டு மக்களிடம் வாட்ஸ் ஆப் செயலி இன்றியமையா இடம் பெற்றிருக்கிறது. இந்த செயலி மூலம் தகவலை பயனாளர்கள் பரிமாறி வருகின்றனர். மேலும் இந்த செயலி மூலம் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் வசதியும் உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே வாட்ஸ் ஆப் செயலி மக்களுக்கு பயன்படும் பல அப்டேட்களை வெளியிடப்போவதாக அறிவித்தது. மேலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ் ஆப் செயலி புதிய விதிமுறைகள் நடைமுறை படுத்த போவதாகவும் அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விரைவில் அமலுக்கு வரும் புதிய விதிமுறை:

புதிய அப்டேட்களில் பணபரிவர்தனையை மக்கள் வாட்ஸ் ஆப் செயலி மூலமே பண்ணமுடியும். மேலும் வாட்ஸ் ஆப் வெப் மூலம் கணினியில் வீடியோ மற்றும் ஆடியோ கால் பேசும் வசதியும் இடம் பெரும் போன்ற பல அப்டேட்களை அளித்து வருகிறது. தற்போது புதிய விதிமுறைகள் வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை பயனாளர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே தங்களது போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்றும் அறிவித்துள்ளது.

டிரம்பின் சர்ச்சை கருத்து – இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!!

வாட்ஸ் ஆப் செயலியில் சில பொய்யான தகவல் பரவி வருகிறது. இதற்காக ஓர் தகவலை 5 பேருக்கு மட்டுமே பகிரமுடியும் என்ற விதிமுறையை வாட்ஸ் ஆப் நிறுவனம் நடைமுறைப்படுத்தியது. அதிகம் பகிரப்பட்ட தகவல்  1 முறை மட்டுமே பகிரமுடியும். இருந்தும் பல பொய்யான தகவல்கள் பரவி வந்தது. இதனால் வாட்ஸ் ஆப் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது. மேலும் தகவலை யார் பரிமாறுகிறாரோ அவரே அந்த தகவலின் உண்மைத்தன்மைக்கு பொறுப்பு போன்ற விதிமுறைகள் நடைமுறைப்படுத்த படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விதிமுறைகளை அனுமதிப்போரால் மட்டுமே இனி வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்த முடியும் இல்லையெனில் அவர்களது கணக்கு நீங்கி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here