டிரம்பின் சர்ச்சை கருத்து – இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!!

0

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்கவுள்ளார். ஏற்கனவே தேர்தல் முடிவை ஏற்காமல் டிரம்ப் பல சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தனது சமூகவலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதனால் அவரது இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப்:

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்பின் ஆட்சி காலம் முடிவடைய போகிறது. புதிதான அதிபரை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகளும் வெளிவந்தது. அதில் புதிய அதிபராக ஜோ பைடேன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலின் முடிவை தற்போதைய அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேர்தலில் குழப்பம் நடந்துள்ளது என்றும் இது சரியான முடிவு இல்லை என்றும் கூறிவருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது ஜோ பைடன் புதிய அதிபராக நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி இரு அவையின் கூட்டு கூட்டத்தில் துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் நடைபெற்றுவருகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும் அங்குள்ள தடுப்புகளை உடைத்து நாடாளுமன்றத்திற்குள் புகுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துணை அதிபர் அங்கு இருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் ஜோ பைடனின் பதவி ஏற்கும் விழா நிறுத்தப்பட்டுள்ளது.

#INDvsAUS 3வது டெஸ்ட் – மழையினால் ஆட்டம் பாதிப்பு!!

சமூகவலைத்தள கணக்குகள் முடக்கம்:

இந்நிலையில் அதிபர் டிரம்ப் தனது டிவீட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய ஓர் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர்,”இந்த தேர்தல் தங்களிடம் இருந்து திருடப்பட்ட தேர்தல், இது எப்படிப்பட்டவை என்று அனைவர்க்கும் தெரியும். நமக்கு அமைதி மட்டுமே வேண்டும். மேலும் நாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். வன்முறை நடைபெறும் இந்த சமயத்தில் இது போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளதால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் டிவீட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் டிரம்ப் நாடாளுமன்ற முற்றுகையின் பொது தனது ஆதரவாளர்களுடன் பேசிய வீடியோ தற்போது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here