அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட வன்முறை – 4 பேர் உயிரிழப்பு!!

0
parliament attack

அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரை அமெரிக்காவின் அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூட்டப்பட்ட இடத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 4 பேர் உயிரிழப்பு.

நாடாளுமன்றத்தில் வன்முறை

நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் அமெரிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரை அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதற்கான இரு அவையின் கூட்டு கூட்டத்தில் தற்போதைய துணை அதிபரான மைக் பென்ஸ் தலைமையில் ஜோ பைடனை அதிபராக அறிவுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது அங்கு திரண்ட ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஜோ பைடன் அதிபராக்குவதற்கு எதிராக குரல் எழுப்பினர். அப்போது அங்கிருந்த காவல் அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்வானது பாதியிலேயே நிறுத்தப்பட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். மற்ற உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

புதிய விதிமுறைகளை அனுமதிப்பவர்களுக்கு மட்டுமே வாட்ஸ் ஆப் – அமலுக்கு வரும் புதிய அப்டேட்!!

வன்முறையின் போது பைப் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அச்சமயத்தில் துப்பாக்கி சத்தம் கூட கேட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசாரால் துப்பாக்கி சூடு நடந்தது. துப்பாக்கிசூட்டில் ஒரு பெண் மீது குண்டு பாய்ந்து, மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் ஏற்பட்ட இடத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து பல உலகநாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here