கேப்டன் கங்குலி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் – விரைவில் பணிகளை தொடர வாழ்த்தும் ரசிகர்கள்!!

0
ganguly discharge

ஜனவரி 2ம் தேதி நெஞ்சுவலியால் கொல்கத்தா வுட்லாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கங்குலி டிஸ்சார்ஜ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான 48 வயதான சவுரவ் கங்குலி கடந்த ஜனவரி 2 ம் தேதி நெஞ்சுவலிகாரணமாக கொல்கத்தாவின் வுட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஜனவரி 1 ல் லேசான உடல்நல குறைவுடன் காணப்பட்ட கங்குலிக்கு சனிக்கிழமை மதியம் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட வன்முறை – 4 பேர் உயிரிழப்பு!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டபோது இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சரி செய்ய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தார். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்த அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் உடல் நலம் தேறி தனது பணிகளை செய்ய திரும்பவேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here