அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – குஷியில் நகை பிரியர்கள்!!

0

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

தங்கம்:

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. குறிப்பாக இந்த புத்தாண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வந்தது. சவுரன் ஆபரணதங்கத்தின் விலை சுமார் 39ஆயிரம் வரை சென்றது. வரும் மாதங்களில் திருமணம், காதுகுத்து போன்ற சுபநிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறும். அதற்காக தங்கம் வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வந்தனர். தற்போது இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட வன்முறை – 4 பேர் உயிரிழப்பு!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சுமார் ரூ.640 குறைந்துள்ளது. தற்போது சென்னையில் 1 சவுரன் ஆபரணத்தங்கம் ரூ.38,440 விற்பனைசெய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 1 கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் தற்போது சென்னையில் ரூ.4,805க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி வெள்ளியின் விலையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1 கிராம் வெள்ளி தற்போது ரூ.74.20க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.74,200க்கு விற்பனை செய்யப்போவது வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here