‘கொரோனா தடுப்பூசிகளை பயணிகள் விமானத்திலும் எடுத்து செல்லலாம்’ – மத்திய அரசு அனுமதி!!

0
vaccines

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கொரோனா தடுப்பூசிகளை பயணிகள் விமானத்திலும் எடுத்து செல்லலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த தடுப்பூசிகள் தன்னார்வலர்களுக்கு மட்டும் முதலாவது செலுத்தி ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும் ஜனவரி 13 ம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsAUS டெஸ்ட் தொடர் – அறிமுக போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய சைனி!! குவியும் பாராட்டுகள்!!

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகளை பயணிகள் விமானத்திலும் எடுத்து செல்லலாம் என்றும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் ஜூலை மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படவேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்திருப்பதால் அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. உடான் என்கிற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் செயல்படக்கூடிய பயணிகள் விமானத்தில் தடுப்பு மருந்துகளை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here