தளபதி 65ல் நடிக்கப்போகும் கதாநாயகி இவர் தான்- இணையத்தில் கசிந்த தகவல்!!

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தளபதி விஜய். சமீபத்தில் தளபதி 65 கான தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் யார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக வெளிவந்தது. தற்போது தளபதி 65 படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

தளபதி விஜயின் 65 வது படம்:

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் மக்கள் அனைவராலும் தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய். இவரது படம் ஆண்டுக்கு  ஒரு வெளியானாலும் அந்த ஒரு படத்திற்காக ரசிகர்கள் ஆராவதோடு எதிர் பார்த்துவருவார்கள். மேலும் அந்த படம் வெளி வந்தது ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது. அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக கொண்டாடி வருவார்கள். தற்போது தளபதி நடித்து வெளிவர காத்திருக்கும் படம் தான் மாஸ்டர். இந்த படம் கடந்த ஆண்டே வெளிவர தயாரக இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அப்போது கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் மாஸ்டர் திரைப்படம் வெளியாகவில்லை. தற்போது பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ம் தேதி அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஸ்டர் படத்தின் அப்டேட்கள் தற்போது வெளியிட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்களுக்கு மாஸ்டர் படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.

தளபதி 65:

அதன் பிறகு தளபதி தனது 65 படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணி சேர்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படத்திலும் அரசியல் கலந்திருப்பதால் அந்த கூட்டணி சேரவில்லை என்று தகவல் வெளியானது. தற்போது தளபதி 65 வது படத்தை இளம் இயக்குனர் மற்றும் விஜயின் ரசிகன் நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது. மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் மோதல் – வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஆனால் தற்போது ‘புட்ட பொம்மா’ பாடல் மூலம் பிரபலமான பூஜா ஹெக்டே நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் தமிழில் நடித்த முதல் படம் ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படம். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட் ஆகவில்லை. எனவே தற்போது தளபதி 65ல் விஜய் உடன் ஜோடி சேரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here